விருதுநகர்: 13 துறைகளில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக ஒன்றிய அரசின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விருதுநகரில் ரூ.45.39 கோடியில் இலவச வீட்டு மனைப் பட்டாக்களை துணை முதல்வர் உதயநிதி வழங்கினார். 255 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.45.39 கோடியில் இலவச வீட்டு மனைப் பட்டாவை வழங்கினார். முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் வென்ற 2,111 பேருக்கு ரூ.42.96கோடியில் பரிசுத்தொகை வழங்கினார். மேலும் 20 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.12.50லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின்; விளையாட்டு உபகரணங்களை வழங்குவதில் மகிழ்ச்சி அளிக்கிறது. விளையாட்டுப் போட்டிகளை ஊக்குவிக்கவே முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. ரூ.86 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன. முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்காக ரூ.80 கோடி ஒதுக்கீடு செய்யபப்ட்டுள்ளது. 13 துறைகளில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக ஒன்றிய அரசின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் உலக அளவில் சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர். ஹங்கேரியில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா தங்கம் வென்றது. தெற்கசியாவிலேயே முதன்முறையாக சென்னையில் F4 கார்பந்தயம் நடத்தப்பட்டது என்று கூறினார்.
The post 13 துறைகளில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக ஒன்றிய அரசின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.