சென்னை: 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். பொதுத்தேர்வுகள் உங்களது உயர்கல்விக்கும், வாழ்க்கைக்கும் மிக முக்கியமான அடித்தளமாகும்; உங்களது உயர்கல்விக்காக புதுமைப்பெண், நான் முதல்வன் போன்ற பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. நானும், தமிழ்நாடு அரசும் உங்கள் பக்கத்திலேயே எப்பொழுதும் உறுதுணையாக இருப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.
The post 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.