
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பாகல்கோட் பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவன் அபிஷேக். இவர் நடந்து முடிந்த பொதுத்தேர்வில் 625 மதிப்பெண்களுக்கு 200 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றுள்ளார். அபிஷேக் அனைத்து பாடத்திலும் தோல்வியடைந்துள்ளார்.
இந்நிலையில், தேர்வில் தோல்வியடைந்த அபிஷேக் மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளார். இதையடுத்து மகனின் மன அழுத்தத்தை போக்கவும், அவரை ஊக்கப்படுத்தவும் அபிஷேக்கின் பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.
அதற்காக கேக் வாங்கி வந்த பெற்றோர் அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்களை அழைத்து பார்ட்டி கொடுத்துள்ளனர். கேக்கை வெட்டி அபிஷேக்கிற்கு பெற்றோர் ஊட்டி கொண்டாடினர். இது தொடர்பாக கூறிய அபிஷேக், மறுதேர்வின்போது அனைத்து பாடத்திலும் நிச்சயம் தேர்ச்சி பெறுவேன்' என்றார்.