ஈரோடு, பிப்.19: ஈரோடு மாவட்டத்தில் 10ம் வகுப்பு செய்முறை தேர்வு 22ம் தேதி தொடங்க உள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பொதுத்தேர்வு வருகிற மார்ச் 3ம் தேதி முதல் தொடங்கி, மார்ச் 23ம் தேதி வரை நடக்கிறது. பிளஸ் 1க்கான பொதுத்தேர்வு மார்ச் 5ம் தேதி முதல் தொடங்கி, மார்ச் 25ம் தேதி வரை நடக்கிறது.
10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 28ம் தேதி தொடங்கி, ஏப்ரல் மாதம் 15ம் தேதி வரை நடக்கிறது. இதனையொட்டி, பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கான செய்முறை தேர்வு நடந்து வருகிறது. இதில், தற்போது ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கான செய்முறை தேர்வு நடந்து வருகிறது.
இந்த செய்முறை தேர்வு வருகிற 21ம் தேதியுடன் நிறைவு பெற உள்ளது. இதையடுத்து 10ம் வகுப்புக்கான செய்முறை தேர்வு வருகிற 22ம் தேதி தொடங்கி, 28ம் தேதியுடன் நிறைவு செய்யப்பட உள்ளது. இதற்காக செய்முறை தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான பணி ஆணையும் வழங்கப்பட்டுள்ளது. இத்தகவலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுப்பாராவ் தெரிவித்தார்.
The post 10ம் வகுப்பு செய்முறை தேர்வு 22ம் தேதி தொடங்குகிறது appeared first on Dinakaran.