₹10 லட்சத்தில் திட்ட பணிகள் தொடக்கம்

1 day ago 3

 

காரிமங்கலம், மார்ச் 24:காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பெரியாம்பட்டி ஊராட்சியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ₹10 லட்சம் மதிப்பில் பல்நோக்கு சமுதாய கட்டிட பணிகள் தொடக்க விழா நடந்தது. முன்னாள் மாவட்ட கவுன்சிலர் காவேரி, ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்னாள் இயக்குனர் ரவிசங்கர், சந்திரன், கணபதி, பெருமாள், முருகன் உட்பட பலர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ தலைமை வகித்து, கட்டிட பணியை பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், முன்னாள் கவுன்சிலர் சின்னசாமி, குப்பன், நிர்வாகிகள் பாரதிராஜா, மணிகண்டன், கோகுல், சாந்தகுமார், சக்திவேல், ராஜேந்திரன், தனபால், சம்பத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ₹10 லட்சத்தில் திட்ட பணிகள் தொடக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article