10-ம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வு: இந்த கேள்விக்கு பதில் அளித்து இருந்தாலே மதிப்பெண்

3 hours ago 1

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் ஒரு மதிப்பெண் வினாக்கள் பிரிவில் நான்காவது கேள்விக்கு பதில் அளித்து இருந்தாலே (Attend செய்திருந்தாலே) ஒரு மதிப்பெண் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான சமூக அறிவியல் பொதுத் தேர்வு கடந்த 15-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் ஒரு மதிப்பெண் வினாக்கள் பிரிவில் நான்காவது கேள்வியில், ஜோதிபா பூலே தொடர்பான கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதற்கான விடைகள் முரணாக இருந்தன.

இதையடுத்து இந்த கேள்விக்கு பதில் அளித்திருந்தாலே மதிப்பெண் வழங்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் இன்று பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பொதுத் தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கிய நிலையில், நான்காவது கேள்விக்கு விடை அளித்து இருந்தாலே அதற்கு ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும் என அரசு தேர்வுகள் துறை உத்தரவிட்டுள்ளது.

Read Entire Article