10 அம்ச கோரிக்கை வலியுறுத்தி போட்டா ஜியோ ஆர்ப்பாட்டம்

17 hours ago 3

விருதுநகர், ஏப்.4: விருதுநகரில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போட்டா ஜியோ அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பாக போட்டா ஜியோ முதன்மை ஒருங்கிணைப்பாளர் சரவணக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

7வது நிதிக்குழு நிர்ணயத்தில் 21 மாத நிலுவைத்தொகையை வழங்க வேண்டும். தலைமைச்செயலகம் முதல் அனைத்து துறைகளிலும் உள்ள அனைத்து பிரிவு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பதிவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

The post 10 அம்ச கோரிக்கை வலியுறுத்தி போட்டா ஜியோ ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article