1 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது

2 days ago 2

திருப்பூர்,

திருப்பூர் போலீசாருக்கு கஞ்சா கடத்தல் குறித்து ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் திருப்பூர் ரெயில் நிலையம் முன்புறம் நேற்று அதிகாலை சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்துக்கு இடமாக வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அவர்களிடம் 1 கிலோ கஞ்சா இருந்தது. விசாரணையில் அவர்கள் தேனி பெரியகுளத்தை சேர்ந்த அஜ்மல்கான் (வயது 37), வேடசந்தூரை சேர்ந்த கன்னியப்பன் (25) என்பது தெரியவந்தது. வெளியூரில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து திருப்பூரில் விற்பனை செய்ய இருந்தது கண்டறியப்பட்டது.

இதைத்தொடர்ந்து 2 பேரையும் கைது செய்து 1 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Read Entire Article