ஹோலி பண்டிகை குறித்து அவதூறு: பாலிவுட் பெண் இயக்குனர் மீது வழக்கு

4 months ago 14

மும்பை: பாலிவுட் திரைப்பட இயக்குநரும், நடன இயக்குனருமான ஃபரா கான், இந்துக்களின் புனிதப் பண்டிகையான ஹோலி பண்டிகை குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததற்காக, அவர் மீது விகாஸ் பதக் என்பவர், தனது வழக்கறிஞர் அலி காஷிஃப் கான் தேஷ்முக் மூலம், கார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், ‘கடந்த 20ம் தேதியன்று தொலைக்காட்சி ஒன்றில் பங்கேற்ற ஃபரா கான், இந்துக்களின் புனித பண்டிகையான ஹோலி பண்டிகை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்துள்ளார்.

இழிவான வார்த்தையைப் பயன்படுத்தி உள்ளார். அவரது கருத்துக்கள் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும், குறிப்பிட்ட சமூகத்தின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் உள்ளது. இரு சமூகத்தினரிடைய மோதலை உருவாக்கும் வகையிலும் உள்ளதால், அவர் மீது வழக்கு பதிந்து விசாரிக்க வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது. அதையடுத்து ஃபரா கான் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஹோலி பண்டிகை குறித்து அவதூறு: பாலிவுட் பெண் இயக்குனர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Read Entire Article