ஹோண்டா இந்தியா நிறுவனம், புதிய என்எக்ஸ் 200 மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. சிபி200 எக்ஸ் பைக்கிற்கு மாற்றாக இது இருக்கும் என கூறப்படுகிறது. இதில் சிபி200 பைக்கில் உள்ள 184 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. புதிய வாகன விதிகளுக்கு ஏற்ப, வாகனத்தில் பழுது ஏற்பட்டால் எச்சரிக்கை செய்யும் தொழில்நுட்பம் இதில் இடம் பெற்றுள்ளது.
மேலும், டூயல் சானல் ஏபிஎஸ், டிஎப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், புளூடூத் வசதி போன்றவை இடம் பெற்றுள்ளன.3 வண்ணங்களில் கிடைக்கும். ஷோரூம் விலை சுமார் ₹1.68 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
The post ஹோண்டா என்எக்ஸ் 200 appeared first on Dinakaran.