ஹோண்டா நிறுவனம், எக்ஸ் – ஏடிவி மேக்சி ஸ்கூட்டரை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதில் 745 சிசி இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 58.6 எச்பி பவரையும், 69 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். டிசிடி கியர் பாக்ஸ் உள்ளது. 13.2 லிட்டர் பெட்ரோல் டேங்க், சீட்டுக்கு அடியில் 22 லிட்டர் கொள்ளளவு ஸ்டோரேஜ் இடம் உள்ளது.
ஸ்கூட்டரின் எடை 237 கிலோ. கிராஸ் ஸ்போக் வீல்கள், டிஸ்க் பிரேக்குகள், 5 அங்குல டிஎப்டி டிஸ்பிளே, கீலெஸ் இக்னிஷன், டிராக்ஷன் கண்ட்ரோல், ஏபிஎஸ், குரூஸ் கன்ட்ரோல், ஸ்டாண்டர்டு, ஸ்போர்ட், ரெயின், கிராவல் மற்றும் யூசர் ஆகிய டிரைவிங் மோட்கள் உள்ளன. ஷோரூம் விலை சுமார் ரூ.11.9 லட்சம் னெ நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிஎம்டபிள்யூ சி400 ஜிடிக்கு நேரடி போட்டியாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post ஹோண்டா எக்ஸ் ஏடிவி appeared first on Dinakaran.