![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/11/38911064-9.webp)
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் திரிஷா. இவர் 2002-ல் வெளியான 'மவுனம் பேசியதே' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து 'சாமி', 'கில்லி', 'ஆறு' உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். கதாநாயகியாக அறிமுகமாகி 22 ஆண்டுகள் கடந்தும் தமிழ் சினிமாவில் இவருக்கு தனியாக ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றனர்.
சமீபத்தில் அஜித் மற்றும் திரிஷா நடிப்பில் 'விடாமுயற்சி' படம் வெளியானது. இந்த படத்தை மக்கள் மத்தியில் விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவர் அடுத்ததாக, "சூர்யா 45, குட் பேட் அக்லி, தக் லைப்" ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், அவரது எக்ஸ் தள பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை திரிஷா தெரிவித்துள்ளார். அது மீட்கப்படும் வரை அதில் பதிவிடப்படும் எதுவும் என் பதிவல்ல என்று தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்கத்தை கைப்பற்றியது யார்? அவர்களது நோக்கம் என்ன? என்பது பற்றி தெரியாத நிலையில், ஹேக் செய்யப்பட்ட எக்ஸ் தள கணக்கை மீட்க திரிஷா முயற்சி செய்துவருகிறார்.