ஷாருக்கானின் 'கிங்' படத்தில் இணையும் பிரபலங்கள்

5 hours ago 2

மும்பை,

இந்தி பட உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் தற்போது 'வார் மற்றும் பதான்' படங்களை இயக்கி புகழ் பெற்ற, சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் 'கிங்' என்ற படத்தில் நடிக்க உள்ளார். இதில் அவரது மகள் சுஹானா கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் வருகிற 20-ந் தேதி தொடங்க உள்ளன. இந்தப் படத்தை அடுத்த ஆண்டு அக்டோபர் அல்லது டிசம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இப்படத்தில், இரண்டு பிரபல நடிகர்கள் இணைய உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதாவது, ஜாக்கி ஷெராப் மற்றும் அனில் கபூர் ஆகியோர் ஷாருக்கானுடன் இணைந்து 'கிங்' படத்தில் நடிக்க உள்ளனர். இவர்கள் மூன்று பேரும் 1995-ம் ஆண்டு வெளியான 'திரிமூர்த்தி' படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Read Entire Article