ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டிச் சென்ற சோனு சூட்: பழைய வீடியோ குறித்து போலீஸ் விசாரணை

1 day ago 3

மண்டி: ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டிச் சென்ற சோனு சூட்டின் பழைய வீடியோ ஒன்று வைரலாவதால் அதுகுறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. பாலிவுட் நடிகர் சோனு சூட், இமாச்சல பிரதேசத்தின் ஸ்பிதி பள்ளத்தாக்கில் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் செல்லும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. கடந்த 2023ல் எடுக்கப்பட்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால், பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர். சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு போன்ற பிரசாரங்களில் அவ்வப்போது ஈடுபடும் சோனு சூட், இதுபோன்று ஹெல்மெட் இல்லாமல் பைக்கை ஓட்டி சென்றது அவரது ரசிகர்கள், வாகன ஓட்டிகள் மத்தியில் விமர்சனங்களுக்கு ஆளாகி உள்ளது. இது தொடர்பாக ஸ்பிதி காவல்துறையும் விசாரணை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘சோனு சூட்டின் பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இருந்தும் அந்த வீடியோ சினிமா சூட்டிங்கின் போது எடுக்கப்பட்டதாக தெரிகிறது’ என்ற கூறினர். இதுகுறித்து சோனு சூட் வெளியிட்ட பதிவில், ‘பாதுகாப்பு தான் முதலில், நாங்கள் சட்டங்களைப் பின்பற்றுகிறோம். இது ஒரு பழைய வீடியோ, சினிமா ஸ்கிரிப்ட்டின் பகுதியாக இருந்தது. எனவே இந்த வீடியோவை புறக்கணிக்கவும்’ என்று அவர் கூறினார். மேலும் தான் ஹெல்மெட் அணிந்தபடி செல்லும் வீடியோ ஒன்றையும் சோனு சூட் வெளியிட்டுள்ளார். இருப்பினும், சமூக வலைதளங்களில் பலர், ‘பிரபலங்கள் சட்டத்திற்கு மேலாக இருக்கிறார்களா?’ என்று கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டிச் சென்ற சோனு சூட்: பழைய வீடியோ குறித்து போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Read Entire Article