ஹெலிகாப்டர் சகோதரர்களான பாஜ பிரமுகர்களின் சொத்தை வழக்கில் இணைக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

3 months ago 24

மதுரை: பாஜவை சேர்ந்த ஹெலிகாப்டர் சகோதரர்களின் மோசடி சொத்துக்களை வழக்கில் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. துபாயைச் சேர்ந்த முகம்மது யூசுப் சவுகத் அலி ஜபருல்லா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கும்பகோணத்தை பூர்வீகமாக கொண்ட நான், தற்போது துபாயில் குடியுரிமை பெற்று வசித்து வருகிறேன். கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்தியா வந்த நாங்கள் விமானங்கள் ரத்தானதால், உடனடியாக துபாய் செல்ல முடியவில்ைல.

அப்போது கும்பகோணத்தை சேர்ந்த பாஜ பிரமுகர்களான ஹெலிகாப்டர் சகோதரர்கள் கணேசன், சுவாமிநாதன் ஆகியோர், எனது நண்பர்கள் மூலம் என் மனைவியிடம் அறிமுகமாகினர். அப்போது அவர்கள், வெளிநாடுகளில் ஹெலிகாப்டர் சேவையை நடத்துவதாகவும், துபாய், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் நிதி நிறுவனங்கள் மற்றும் தங்க வியாபாரம் செய்வதாக கூறியுள்ளனர். அவர்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால், இரு மடங்கு லாபம் பெறலாம் என மூளை சலவை செய்தனர். இதை நம்பி என் மனைவி ரூ.10 கோடியை அவர்களது நிறுவனத்தில் முதலீடு செய்தார்.

தகவலறிந்து நான் கேட்டபோது, என் மனைவியிடம் இருந்து வாங்கிய பணத்தை வெவ்வேறு தொழில்களில் முதலீடு செய்துள்ளதாகவும், அதை பெற கூடுதலாக ரூ.1 கோடி செலுத்தும்படி கூறி ெபற்றனர். இதற்காக அவர்கள் கொடுத்த செக், பணம் இல்லாமல் திரும்பியது. எங்களை ஏமாற்றியது குறித்து புகாரின் பேரில் தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதன்பிறகே எங்களைப் போல பலரை ஏமாற்றியது தெரியவந்தது. புகாரின் மீது போலீசார் வழக்குப்பதிந்து கிட்டதட்ட 4 ஆண்டுகளாகிவிட்டது. இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. எனவே, உரிய அலுவலரை நியமித்து சொத்துக்களை பறிமுதல் செய்து பணத்தை முதலீட்டாளர்களுக்கு திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.முரளிசங்கர், சொத்துக்களை முடக்கிய போலீசார் சம்பந்தப்பட்ட சொத்துக்களை வழக்கில் இணைப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள், பணம் ஆகியவற்றை வழக்கில் இணைக்கும் நடவடிக்கையை 2 மாதத்திற்குள் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

The post ஹெலிகாப்டர் சகோதரர்களான பாஜ பிரமுகர்களின் சொத்தை வழக்கில் இணைக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article