இந்த யூடியூப் சேனல் குறித்து பலரும் கேள்விப் பட்டிருப்போம். எவ்வித முகங்களும் இல்லாமல், பேச்சுக்கள் இல்லாமல் முதன்முதலில் டிரெண்டான சமையல் யூடியூப் சேனல் இதுதான். இதன் மொபைல் செயலியில் செய்முறை விளக்கத்துடன் ஏராளமான சமையல் குறிப்புகள், செய்முறை விளக்கங்கள் என அடங்கியுள்ளன. ஆங்கிலத்தில் இருப்பினும் கூட எல்லோருக்கும் புரியும்படியான வீடியோவும் இணைக்கப்பட்டுள்ளதால் இந்த ஹெப்பர்ஸ் கிச்சன் செயலி (Hebbars kitchen) சமையல் கற்றுக்கொள்ள முயலும் யாவருக்கும் மிகப்பெரும் உதவியாக இருக்கும். இன்றைய கால கட்டத்தில் ஆண்-பெண் இருவருமே சமையல் கலை கற்றுக்கொள்ள வேண்டிய சூழல் இருக்கிறது. மேலும் வெளிநாடு சென்று அங்கு நம் இந்திய உணவுகள் கிடைக்காமல் கஷ்டப்படுவதைக் காட்டிலும் இப்படி நமக்கு நாமே சமையல் தெரிந்து வைத்துக் கொண்டால் எக்காலத்திலும் நமக்கு உதவும். அதற்குதான் எளிமையாக உதவுகிறது இந்தச் செயலி.
ஆஹா கம்பு!
கம்பை கூழ் அல்லது களியாக சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கிறது மற்றும் தசைகளுக்கு நல்ல இறுக்கத்தை கொடுத்து பலத்தைக் கொடுக்கும். நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரை சத்துக்கள் அதிகமாக இருக்கிற அரிசி சாதத்தை சாப்பிட முடியாது. அவர்கள் கம்பை கூழ் களி மற்றும் தோசை செய்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும் மற்றும் உடல் ஆரோக்கியமாகும். கம்பு சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல நோய் தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. கம்பில் நார்ச்சத்துக்கள் அதிகம் கொண்டு இருப்பதால் வயிற்றில் செரிமானக் கோளாறுகள் மற்றும் வயிற்றில் புண்கள் உள்ளவர்கள் தொடர்ந்து சில காலம் கம்பு சாப்பிட்டு வந்தால் வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளும் நீங்கிவிடும். அதிக எடை உள்ளவர்கள் கம்பை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு களை குறைத்து சரியான நேரத்தில் பசி எடுக்க வைக்கிறது. பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படும் காலங்களில் சில சமயங்களில் அதிக இரத்தப் போக்கும் அடிவயிற்று வலியும் வரும். இந்த நேரத்தில் இளஞ்சூடான கம்பு கூழ் குடித்து வந்தால் மேற்கண்ட பிரச்சினைகள் தீரும். கம்பு இரத்தத்தில் உள்ள கழிவுகளை போக்கி இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது இதனால் உடல் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும். கம்பில் புரதச்சத்து அதிகம் இருப்பதால் தலைமுடி உதிர்வு உள்ளவர்கள் கம்பைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் தலைமுடி உதிர்வில் இருந்து விடுபடலாம். கம்பு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூட்டை குறைக்கிறது. இரத்த சோகை உள்ளவர்கள் வாரத்திற்கு 2 நாள் சாப்பிட்டுவந்தால் இரத்தசோகை குணமாகும்.
The post ஹெப்பர்ஸ் கிச்சன்! appeared first on Dinakaran.