மதுரையில் இன்று அ.ம.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்

11 hours ago 4

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில 10 மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது.

கூட்டணி, தொகுதி பங்கீடு, பொதுக்கூட்டம், போராட்டம், நலத்திட்டம் என பல்வேறு தேர்தல் வியூகங்களை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயல்வீரர்கள் கூட்டம் மதுரையில் இன்று நடைபெறுகிறது. அக்கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் தலைமையில் இன்று காலை நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் வரும் தேர்தலை எதிர்கொள்வது, கூட்டணி உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

Read Entire Article