புதுடெல்லி: எப்ஐஎச் ஹாக்கி புரோ லீக் போட்டிகள், வரும் ஜூன் 7ம் தேதி துவங்கி 29ம் தேதி வரை நடைபெற உள்ளன. இப்போட்டிகள், நெதர்லாந்தின் ஆம்ஸ்டெல்வீன் நகரிலும், பெல்ஜியத்தில் ஆன்ட்வெர்ப் நகரிலும் நடைபெறும். இப்போட்டிகளில் மோதும் இந்திய அணிக்கு ஹர்மன்பிரீத் சிங் கேப்டனாக செயல்படுவார். ‘
இந்திய அணியில் சுமித், அமித் ரோஹிதாஸ், ஜுக்ராஜ் சிங், நீலம் சஞ்சீவ் எக்ஸெஸ், ஜர்மன்பிரீத் சிங், சஞ்சய், யக்ஸ்தீப் சிவாச், ராஜ்குமார் பால், நீலகண்ட சர்மா, ஹர்திக் சிங், ராஜிந்தர் சிங், மன்பிரீத் சிங், விவேக் சாகர் பிரசாத், ஷம்ஸெர் சிங், குர்ஜந்த் சிங் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
அணியின் கோல் கீப்பர்களாக, கிருஷண் பஹதுார் பதக், சுராஜ் கர்கேரா ஆகியோர் செயல்படுவர். இந்திய அணி, ஜூன் 7, 9 தேதிகளில் நெதர்லாந்துடனும், ஜூன் 11, 12 தேதிகளில் அர்ஜென்டினாவுடனும், ஜூன் 14,15 தேதிகளில் ஆஸ்திரேலியாவுடனும், ஜூன் 21, 22 தேதிகளில் பெல்ஜியத்துக்கு எதிராகவும் களமிறங்கும்.
The post ஹாக்கி புரோ லீக் இந்திய அணி அறிவிப்பு: ஜூன் 7ல் முதல் போட்டி appeared first on Dinakaran.