ஹர்திக் உண்மையிலேயே நன்றாக பேட்டிங் செய்தார் ஆனால்... - க்ருனால் பாண்ட்யா

3 weeks ago 6

மும்பை,

ஐ.பி.எல். தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவரில் 221 ரன்கள் குவித்தது. பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக விராட் 67 ரன் எடுத்தார்.

மும்பை தரப்பில் பாண்ட்யா, பவுல்ட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து 222 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மும்பை 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 209 ரன் மட்டுமே எடுத்தது. இதன் காரணமாக 12 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு வெற்றி பெற்றது. பெங்களூரு தரப்பில் க்ருனால் பாண்ட்யா 4 விக்கெட் வீழ்த்தினார்.

இந்த போட்டின் ஆட்டநாயகன் விருது ரஜத் படிதாருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின்னர் பெங்களூரு வீரர் க்ருனால் பாண்ட்யா அளித்த பேட்டியில் கூறியதாவது, எனக்கும் ஹர்திக் பாண்ட்யாவுக்கும் உள்ள பந்தம் மிகப்பெரியது. இருப்பினும் இந்தப் போட்டியில் ஒரே ஒரு பாண்ட்யா அணி மட்டுமே வெற்றி பெற முடியும் என்பது எங்களுக்கு தெரியும். நாங்கள் ஒருவருக்கொருவர் வைத்திருக்கும் அன்பும், பாசமும் இயல்பானது.

ஹர்திக் பாண்ட்யா உண்மையிலேயே நன்றாக பேட்டிங் செய்தார். ஆனால், எங்கள் அணி வெற்றி பெற்றது மிகவும் சிறப்பானது. கடைசி ஓவரில் நான் பந்து வீச வந்த போது சான்ட்னர் இருந்தார். லெக் சைடு திசையில் பவுண்டரி அளவு குறைவாக இருந்தது. நான் கடந்த 10 ஆண்டுகளாக இந்த மைதானத்தில் விளையாடி இருக்கிறேன். எனவே, ஒரு கட்டத்தில் அந்த அனுபவம் எனக்கு மிகவும் உதவியது. அதனால்தான் அவருக்கு ஆப் சைடு திசையில் பந்தை வீசினேன்.

ஒரு பந்துவீச்சாளராக நீங்கள் மிகவும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த நினைப்பீர்கள். 100 சதவீதம் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த நினைப்பீர்கள். மேலும் எங்கள் அணி வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். லக்னோ அணியில் ஆன்ட்டி ப்ளவர் உடன் ஏற்கனவே எனக்கு நல்ல அனுபவம் இருக்கிறது. எனவே அந்த பிணைப்பு இந்த தொடரை நன்றாக எடுத்துச் செல்ல உதவுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article