ஸ்வரயில் செயலி!

1 week ago 3

இந்திய ரயில்வேயின் பலதரப்பட்ட சேவைகளையும் ஒரே செயலியில் பெறும் வகையில் ஒன்றிய ரயில்வே ஸ்வரயில் (Swarail) என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்தியா முழுவதும் பல வழித்தடங்களில் இந்திய ரயில்வேயின் ரயில்கள் இயங்கிவருகின்றன. இந்நிலையில் ரயில் டிக்கெட் புக் செய்ய, முன்பதிவு நிலை அறிதல் போன்றவற்றிற்கு ஐஆர்சிடிசி தளத்தை மக்கள் பயன்படுத்துகின்றனர். அதுபோல ரயில் நிலையங்களில் ரயில் எந்த ப்ளாட்பாரத்தில் நிற்கிறது? எந்த இடத்தில் ரயில் வந்து கொண்டிருக்கிறது உள்ளிட்ட தகவல்களை Where is my train போன்ற செயலிகள் மூலமாக தெரிந்து கொள்கின்றனர்.இந்நிலையில் ரயில்வே பயணிகளுக்கு ஒரே செயலியில் அனைத்து வசதிகளை அளிக்கும் வகையில் இந்திய ரயில்வே அமைச்சகமே SwaRail என்ற புதிய செயலியை தற்போது அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி மூலமாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல், முன்பதிவில்லா டிக்கெட்டுகள், ப்ளாட்பார்ம் டிக்கெட்டுகள், உணவு ஆர்டர், ரயில் விவரங்களை அறிதல், ரயில் எங்கே வருகிறது என ட்ராக் செய்தல், ரயில் பெட்டியின் அமைப்பு உள்ளிட்ட பல விவரங்களைப் பெற முடியும். இனி பயனாளர்கள் ரயில்வே சார்ந்த ஒவ்வொரு சேவைக்கும் ஒரு செயலியைப் பயன்படுத்தத் தேவையில்லை.

 

The post ஸ்வரயில் செயலி! appeared first on Dinakaran.

Read Entire Article