சென்னை,
பிரபல தெலுங்கு நடிகர் அதிவி சேஷ். இவர் தற்போது ஷானியல் டியோ இயக்கத்தில், 'டகோயிட்' என்ற படத்தில் நடித்து வருகிறார். சுப்ரியா யர்லகடா மற்றும் சுனில் நரங் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு பீம்ஸ் செசிரோலியோ இசையமைக்கிறார்.
முன்னதாக இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்து வந்தார். ஆனால், பின்னர் சில காரணங்களுக்காக அவர் படத்தில் இருந்து விலகியதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, இப்படத்தில் கதாநாயகியாக யார் நடிப்பார்? என்று ரசிகர்களிடையே கேள்வி எழும்பியது.
இந்நிலையில், இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக 'டகோயிட்' படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நாளை காலை 11:30 மணிக்கு கதாநாயகி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வரும்நிலையில், ரசிகர்கள் மத்தியில் பல்வேறு வியூகங்களைவும் தூண்டியுள்ளது. அதன்படி, ரசிகர்கள் புதிய கதாநாயகி வேறு யாருமல்ல, சீதா ராமம் நட்சத்திரம் மிருணாள் தாக்கூர்தான் என்று கூறுகின்றனர். இது சரியா? அல்லது தவறா? என்பது நாளை தெரிய வரும்.