ஸ்ரீவைகுண்டம் அருகே ஓடும் பேருந்தை வழிமறித்து பள்ளி மாணவனுக்கு அரிவாளால் வெட்டு: டிஎஸ்பி தலைமையில் 5 தனிப்படைகள் அமைப்பு

3 hours ago 1

தூத்துக்கு மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத பேருந்தில் புறப்பட்டுசென்ற பள்ளி மாணவனை ஓடும் பேருந்தை வழிமறித்து மர்ம நபர்கள் வெட்டியுள்ளனர். இதனை அடுத்து ஸ்ரீவைகுண்டம் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

சம்பவ இடத்தில் காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வரும் நிலையில், வருவாய்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், பள்ளிகல்வித்துறையின் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் மாணவனுக்கு சிகிச்சை அளிக்க கூடிய மருத்துவமனையில் உள்ளனர். மாணவனுக்கு சிகிச்சை முடிந்தவுடன் சம்பம் தொடர்பாக விசாரணை நடத்தவுள்ளனர்.

பொதுத்தேர்வு நடைபெற்றும் வரும் சூழலில் மாணவர்களிடம் விசாரணை நடத்த பள்ளி வளாகத்தின் முன் காவலர்கள் உள்ளனர். இன்றைய தேர்வுகள் முடிந்த பின்னர் சம்பந்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்களிடம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வெட்டுபட்ட மாணவனுக்கு தலை, கை உள்ளிட்ட இடங்களில் ஆழமான வெட்டுக்காயங்கள் இருப்பதால் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் தலைமையிலான மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

The post ஸ்ரீவைகுண்டம் அருகே ஓடும் பேருந்தை வழிமறித்து பள்ளி மாணவனுக்கு அரிவாளால் வெட்டு: டிஎஸ்பி தலைமையில் 5 தனிப்படைகள் அமைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article