ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சாலை பணிகளை அதிகாரி ஆய்வு

1 month ago 6

ஸ்ரீவில்லிபுத்தூர், பிப்.10: ஸ்ரீவில்லிபுத்தூர் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தை சார்ந்த மல்லி முதல் கிருஷ்ணன் கோவில் வரை உள்ள சாலை மிகவும் முக்கியமானது. இச்சாலை மொத்தம் 9.2 கி.மீ. நீளம் கொண்டது. சிவகாசியிலிருந்து வத்திராயிருப்பு கூமாபட்டி செல்லும் பொதுமக்களும் பட்டாசு தொழிற்சாலை ஊழியர்களும் மற்றும் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்லும் பக்தர்களும் இதை முக்கிய இணைப்பு சாலையாக பயன்படுத்தி வருகின்றனர்.

மொத்தம் உள்ள 9.2 கிலோமீட்டர் நீளத்தில் சுமார் ஆறு கிலோமீட்டர் நீளம் ஒரு வழித்தடத்திலிருந்து இடை வழி தடமாக அகலப்படுத்தப்பட்டு விட்டது. மீதம் உள்ள 3 கி.மீ. சாலையானது இவ்வாண்டு முதலமைச்சரின் ஒருங்கிணைந்த சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் பரிந்துரைக்கப்பட்டு தற்பொழுது பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது.மல்லி முதல் கிருஷ்ணன்கோவில் வரை உள்ள சாலைப் பணியை விருதுநகர் மாவட்ட நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் பாக்கியலட்சுமி ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு விரைவாக கொண்டு வர உத்தரவிட்டார்.

The post ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சாலை பணிகளை அதிகாரி ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article