ஸ்ரீவில்லிபுத்தூர் | அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து: பணி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

3 hours ago 1

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் தனது கிளினிக்கில் இருந்த அரசு மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவத்தை கண்டித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள், பணி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் பாபு (50). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். ரமேஷ்பாபு சின்னக்கடை பஜாரில் உள்ள தனது கிளினிக்கில் இரவு நேரத்தில் சிகிச்சை அளித்து வருகிறார். நேற்று இரவு 9.30 மணி அளவில் அவர் கிளினிக்கை பூட்டும் போது, மர்ம நபர் ஒருவர் ரமேஷ்பாபுவை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடினார்.

Read Entire Article