
மும்பை,
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ரீலீலா. இவர் தற்போது தமிழில் சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். இது இவர் நடிக்கும் முதல் தமிழ் படமாகும்.
இதற்கிடையில், பாலிவுட்டில் கார்த்திக் ஆர்யனுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா அறிமுகமாக இருக்கிறார். அனுராக் பாசு இயக்கும் இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் படக்குழுவினர் டார்ஜிலிங்கில் படப்பிடிப்பில் இருந்தனர். இந்நிலையில், ஸ்ரீலீலாவும் கார்த்திக்கும் படக்குழுவினருடன் கூட்டத்தில் சென்றபோது நடந்த ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்து இருக்கிறது.
அதன்படி, கார்த்திக் ஆர்யனின் பின்னால் நடந்து சென்ற ஸ்ரீலீலாவை திடீரென ஒரு அடையாளம் தெரியாத நபர் கூட்டத்திற்குள் இழுத்தார். அதிர்ஷ்டவசமாக, ஸ்ரீலீலா மேலும் கூட்டத்திற்குள் இழுக்கப்படுவதற்கு முன்பு பாதுகாவலர்கள் தடுத்தனர். ஸ்ரீலீலா அதிர்ச்சியடைந்திருந்தாலும் சிரிப்புடன் நகர்ந்து சென்றார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.