ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா பந்தல்கால் நடப்பட்டது: டிச. 30 விழா தொடக்கம்

2 months ago 10

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா பந்தல்கால் நடும் நிகழ்ச்சி இன்று நடந்தது. பூலோக வைகுண்டம் என போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா ஒவ்ெவாரு ஆண்டும் கோலாலகமாக நடைபெறும். அதன்படி இந்தாண்டு விழா திருநெடுந்தாண்டகத்துடன் வரும் டிசம்பர் 30ம் தேதி துவங்குகிறது. இந்த விழா ஜனவரி 20ம் தேதி வரை நடக்கிறது. டிசம்பர் 31ம் தேதி பகல் பத்து உற்வசம் துவங்குகிறது. ஜனவரி 9ம் தேதி மோகினி அலங்காரம், 10ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.

16ம் தேதி திருக்கைத்தல சேவை, 17ம் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி, 19ம் தேதி தீர்த்தவாரி, 20ம் தேதி நம்மாழ்வார் மோட்சம் நடக்கிறது. இந்தநிலையில் ரங்கநாதர் கோயில் ஆயிரங்கால் மண்டபம் அருகே வைகுண்ட ஏகாதசி விழா பந்தல்கால் நடும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. பந்தல்காலுக்கு புனிதநீர் ஊற்றி, சந்தனம், மாவிலை மற்றும் மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் கோயில் யானைகள் மரியாதை செலுத்த பந்தல்காலை கோயில் பணியாளர்கள் நட்டனர். இதைதொடர்ந்து ஆயிரங்கால் மண்டபம் அருகே கூடுதல் பந்தல் கால்கள் ஊன்றி திருக்கொட்டகை அமைக்கும் பணி நடைபெற உள்ளது.

The post ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா பந்தல்கால் நடப்பட்டது: டிச. 30 விழா தொடக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article