ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் திருச்சி எம்பி துரைவைகோ ஆய்வு

2 hours ago 2

திருச்சி, மே 20: ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் திருச்சி எம்பி துரைவைகோ நேற்று ஆய்வு செய்து மக்களிடம் அங்கு தேவையான கூடுதல் வசதிகள் குறித்து கேட்டறிந்து, சம்மந்தப்பட்ட துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கலந்துரையாடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார். திருச்சி, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை அப்பகுதி மக்களின் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. தினசரி சுமார் 2 ஆயிரம் மக்கள் வரை ஸ்ரீரங்கம் அரசு மருத்தவமனையில் சிகிச்சைக்கு வருகை தருகின்றனர். இந்த நிலையில் திருச்சி எம்பி துரைவைகோ நேற்று ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை அலுவலர்கள் மற்றும் மக்களிடம் அங்கு கூடுதலாக தேவைப்படும் மருத்துவவசதிகள், மருத்துவ உபகரணங்கள்,

படுக்கை வசதிகள் மருத்துவ பொருட்களை சேமித்து வைக்க தேவையான கட்டிட வசதிகள், மருத்துவமனையில் உள்ள கழிவுநீர் வடிகால் பிரச்னைக்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், மற்றும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் போன்றவற்றை கேட்டறிந்தார். ஸ்ரீரங்கத்தில் அரசு மருத்துவமனை அருகே புதிய பஸ் நிலையம் வர இருப்பதால் அந்த சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிா்த்து ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருவோருக்கு ஏதுவாக வசதிகளை ஏற்பாடு செய்து தர சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள், அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து நிறைவேற்றி தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மக்களிடம் கூறினார்.

வேலைவாய்ப்பு உயரும்
திருச்சி மாநகரில் பயன்படுத்த கூடிய இடங்களை மாநகராட்சி நேரில் ஆய்வு செய்து, எந்த இடத்தில் எப்படிபட்ட தளங்களை உருவாக்கலாம் என்ற ஒரு விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்து, விரைவில் அதை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். அதேபோல் அவற்றை பராமரிப்பதற்கு அதை பயன்படுத்தும் பொதுமக்களிடம் இருந்து ஒரு கணிசமான கட்டணத்தை நிர்ணயித்து மாநகராட்சி பெற்றுக்கொள்ளலாம். மேலும் இந்த இடங்களை பயன்படுத்துவதால் வேலை வாய்ப்பையும் உருவாக்கி கொடுக்கலாம் என்று கூறுகின்றனர்.

The post ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் திருச்சி எம்பி துரைவைகோ ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article