ஸ்ரீரங்கத்தில் மண் சரிவில் சிக்கிய தொழிலாளி பத்திரமாக மீட்பு

6 months ago 22

திருச்சி,

திருச்சி ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் அருகே பள்ளம் தோண்டி, குடிநீர் குழாய் பொருத்தும் பணிகள் நடைபெற்று வந்தது. அப்போது திடீரென மண்சரிவு ஏற்பட்டது. இதில் திருச்சி பெரியமிளகுப்பாறை பகுதியைச் சேர்ந்த செல்வம் (46 வயது) என்ற மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் சுமார் 15 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டார். இதையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மண் சரிவில் சிக்கிய தொழிலாளிக்கு தேவையான ஆக்சிஜன் கொடுத்தனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, அவரை பத்திரமாக மீட்டனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Read Entire Article