தூத்துக்குடி - கன்னியாகுமரி இடையே விரைவில் தேசிய நெடுஞ்சாலை

7 hours ago 3

தூத்துக்குடியில் இருந்து கன்னியாகுமரி வரை சுமார் 120 கி.மீ. தூரத்துக்கு விரைவில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த சாலை தற்போது உள்ள சாலையில் இருந்து தனியாக அமைக்கப்படுவதால் இதற்காக சுமார் 600 எக்டேர் வரை நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.

இந்த பணிக்காக தாசில்தார்கள் நியமிக்கப்பட்டு, எந்தெந்த சர்வே எண்களில் உள்ள நிலங்கள் வழியாக சாலை அமைய உள்ளது என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வு முடிந்த பிறகு நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டு சாலை அமைக்கும் பணி விரைவுபடுத்தப்படும்.

இந்த நெடுஞ்சாலை அமைந்தால் தென்மாவட்டங்களில் போக்குவரத்து வசதி பெருகும், சுற்றுலா வளர்ச்சி மேம்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Read Entire Article