சென்னை: திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் கடந்த 13ம் தேதி டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வெளியிட்டார். அந்த வீடியோவில் சனாதனம் தொடர்பு குறித்தும், இந்து அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் குறித்தும் அவதூறாக பேசி உண்மைக்கு புறம்பாக கருத்துகளை பதிவு செய்து வெளியிட்டிருந்தார். இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் சென்னை பெருநகர காவல்துறையில் புகார் அளித்தார்.
அந்த புகாரின்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் உண்மைக்கு மாறாக ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் குறித்து அவதூறாக வீடியோ வெளியிட்டது உறுதியானது. அதை தொடாந்து ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பின்னர் சென்னையில் இருந்து சென்ற தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் திருச்சியில் ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மனை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை சென்னைக்கு அழைத்து வந்து போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதனை தொடர்ந்து போலீசார், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது இருதரப்பு வாதங்களை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி வரும் 24ம் ேததி வரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
The post ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் குறித்து அவதூறு பேச்சு: ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.