ஸ்ரீபெரும்புதூர், ஜன.22: ஸ்ரீபெரும்புதூர் அருகே 10 ஆண்டுகளாக கிளினிக் நடத்திய போலி மருத்துவரை, போலீசார் கைது செய்தனர். சென்னை பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சார்லஸ் (46). இவர், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் மாதா கோயில் தெருவில், கடந்த 10 ஆண்டுகளாக கிளினிக் நடத்தி வந்துள்ளார். முறையாக மருத்துவம் பயிலாமல் கிளினிக் நடத்தபட்டு வருவதாக புகார் எழுந்தது.
அதன்பேரில், மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் தலைமையிலான குழுவினர், நேற்று முன்தினம் வளர்புரம் பகுதியில் உள்ள கிளினிக்கில் சோதனை நடத்தினர். இதில் சார்லஸ், மருத்துவம் பயிலாமல் பொதுமக்களுக்கு, கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சிகிச்சை அளித்து வந்ததும் தெரியவந்தது.
மேலும், கிளினிக்கில் இருந்து மருந்து மாத்திரைகளை பறிமுதல் செய்த சுகாதாரத்துறை அதிகாரிகள், இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசாார், போலி மருத்துவர் சார்லஸை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ஸ்ரீபெரும்புதூர் அருகே போலி மருத்துவர் கைது appeared first on Dinakaran.