ஸ்ரீபெரும்புதூரில் இருசக்கர வாகன தொழிற்சாலையை ரூ.180 கோடியில் விரிவாக்கம் செய்கிறது யமஹா நிறுவனம்

3 weeks ago 5

சென்னை: ஸ்ரீபெரும்புதூரில் உள்ள வல்லம் வடகால் சிப்காடில் யமஹா நிறுவனத்தின் இருசக்கர வாகன உற்பத்தி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. தற்போது வரை இந்த தொழிற்சாலை மொத்தம் ரூ.1789 கோடி முதலீட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலை மூலம் ஏற்கனவே 5,203 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய யமஹா நிறுவனமானது முடிவு செய்துள்ளது.

அதன்படி ரூ.180 கோடி முதலீட்டில் இருசக்கர வாகன தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய யமஹா நிறுவனமானது முடிவு செய்துள்ளது. இதற்காக சுற்றுச்சூழல் அனுமதிக்கோரி தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தில் விண்ணப்பத்தை சமர்பித்துள்ளது. இந்த ரூ.180 கோடி முதலீட்டில் விரிவாக்கம் செய்வதன் மூலம் கூடுதலாக 431 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.180 கோடி முதலீட்டில் இருசக்கர வாகன உற்பத்தி தொடர்பான அசம்ளிங் பிளான்ட், பெயிண்டிங் பிளான்ட், மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு துறையை விரிவாக்கம் செய்ய யமஹா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

The post ஸ்ரீபெரும்புதூரில் இருசக்கர வாகன தொழிற்சாலையை ரூ.180 கோடியில் விரிவாக்கம் செய்கிறது யமஹா நிறுவனம் appeared first on Dinakaran.

Read Entire Article