ஸ்ரீனிவாஸ் இளைஞர்கள் சங்கம் சார்பில் சென்னையில் குழந்தைகள் திருவிழா: போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள்

7 hours ago 2

சென்னை: ஸ்ரீனிவாஸ் இளைஞர்கள் சங்கம் சார்பில் ‘குழந்தைகள் திருவிழா 2025’ சென்னையில் நடைபெற்றது. இதையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ஸ்ரீனிவாஸ் இளைஞர்கள் சங்கம் (சைமா - SYMA) சார்பில் ‘குழந்தைகள் திருவிழா 2025’ சென்னையில் 2 நாட்களாக நடைபெற்றது. இதையொட்டி நடத்தப்பட்ட சதுரங்கம், ஓவியம், குழு பாடல், கட்டுரை உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசளிப்பு விழா சென்னை திருவல்லிக்கேணி என்.கே.டி. தேசிய கல்வியியல் கல்லூரியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், ராணுவ காவல்படையின் லெப்டினன்ட் கர்னல் யு.சச்சின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

Read Entire Article