கோயிலில் இறைவன் கிரகமாவதும் அதில் மாற்றம் நிகழ்வதும் இயற்கையின் கோட்பாடு. இந்த கோட்பாட்டை நம் முன்னோர்கள் அறிந்து அதற்கு தகுந்தபடி வாழ்ந்து வந்துள்ளனர். நாமும் அந்த கோட்பாட்டை அல்லது வழிமுறையை தெளிவாக அறிந்து அதன்வழியே நமது வாழ்வின் வெற்றிக்கான சூட்சுமத்தை அறிந்து கொள்வதே சிறப்பானதாகும். அவ்வாறே இந்த வாரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் ஜோதிடத்தில் தொடர்பு கொள்வோம்.
சக்தி வழிபாட்டின் உச்ச அம்சத்தின் அடையாளமாக காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சி அன்னை விளங்குகிறாள். ஸ்ரீ காமாட்சி அன்னை கலைமகளாகவும் திருமகளாகவும் ஒருங்கிணைந்து காட்சித் தருகிறாள்.
இக்கோயில் பல்லவ மன்னர்களால் 5-6 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது என கல்வெட்டுக்கள் கூறுகின்றன. 14ம் நூற்றாண்டில் சோழர்கள் இக்கோயில் கட்டியதாகவும் வரலாறுகள் உள்ளன. சக்தி தேவியின் உடல் உறுப்புகள் பூமியில் விழுந்து அவை சக்தி பீடங்களாக காட்சியளிக்கின்றன. அவற்றில் 18வது சக்தி பீடமாக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் உள்ளது.
சிவபெருமான் பல்வேறு யுகங்களில் பல அவதாரம் எடுத்து சக்தியை காப்பாற்றினார். அவ்வாறே, கலியுகத்தில் ஆதிசங்கரராக தோன்றி மரத்திலிருந்து சக்தி வெளிபட்ட உடன் சிவன் துர்வாச ரூபத்தை எடுத்து முதலில் ஸ்ரீ வித்யா மந்திரத்தை உச்சரித்து ஸ்ரீ எந்திரத்தில் ஒரு பெரிய எந்திரத்தை காமாட்சிக்கு முன்னால் யோனி வடிவ தொட்டியில் பிரதிஷ்டை செய்து வணங்கினார் என கூறப்படுகிறது.
லலிதா சகஸ்ர நாமங்கள் இயற்றி காமாட்சியின் இருப்பிடமான மணித்வீபத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள நிலையை ஸ்ரீ சக்கரத்திலும் காணலாம்.
ஒவ்வொரு தேவதைக்கும் கிரகங்கள் நாமகரணத்தை செய்கின்றன. அவ்வாறே, ஸ்ரீ காமாட்சி அம்மனுக்கு சுக்கிரனும் சனியும் இணைந்து நாமா கரணம் செய்துள்ளன. சனியும் சுக்ரனும் இணைவு பெற்றவர்கள் பொருளை சேமிக்கும் பழக்கம் உடையவர்கள். சிக்கனத்தை கையாள்வார்கள் என்பது ஜோதிட விதியாகும். ஜாதகத்தில் ரிஷப லக்னமாக இருந்து 9ம் பாவகத்தில் சனி கும்பத்தில் அமர்ந்து விருச்சிகத்தில் உள்ள சுக்ரனை பார்வை செய்தால் திருமணம் தடைபட்டு நீண்டகாலம் செல்லும். அவர்கள் தாமரை மலரை அம்பாளுக்கு மாலையாக கொடுத்து வெண் பொங்கல் நெய்வேத்தியம் செய்தால் திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.
இக்கோயில் சக்தி பீடத்தின் நாபியின் சக்தியாகச் சொல்லப்படுகிறது. புத்திர பாக்கியத்திற்காக வேண்டுபவர்கள் பௌர்ணமி அன்று இனிப்பை அம்பாளுக்கு படைத்து இங்குள்ள குழந்தைகளுக்கு கொடுத்துச் சென்றால் புத்திர பாக்கியம் உண்டாகும். ரிஷப லக்னத்திற்கு தர்ம – கர்மா அதிபதியாக சனி பகவான் உள்ளார். ஆகவே, இக்கோயிலில் உள்ள கருப்பு நிற பசுவிற்கு தானியமும் அகத்திக் கீரையும் கொடுத்து வந்தால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். இதனை பௌர்ணமி அன்று செய்வது சிறப்பு.
7ம் பாவகத்தில் சுக்ரன் இருப்பவர்கள் இக்கோயிலில் வழிபட வரும் கன்னிப் பெண்ணிற்கு வஸ்திரம் தானம் செய்து பழங்கள் கொடுத்தால் தோஷம் விலகி விரைவில் திருமணம் நடக்கும்.
சனி தோஷம் விலக இங்கு பௌர்ணமி பூஜையில் கலந்து கொள்வது சிறப்பாகும். ஆட்டிசம் பிரச்னை உள்ளவர்கள் பௌர்ணமி பூஜையில் கலந்து கொண்டு எள்ளுருண்டை, கோதுமை இனிப்பு, ஜிலேபி ஆகியவற்றை நெய்வேத்தியமாக வைத்து பக்தர்களுக்கு கொடுத்தால் ஆட்டிசம் பிரச்னைகள் தீர்வாகும்.
ஜோதிடர் திருநாவுக்கரசு
The post ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயில் appeared first on Dinakaran.