'ஸ்பைடர் மேன் 4' : அப்டேட் கொடுத்த டாம் ஹாலண்ட்

3 months ago 23

வாஷிங்டன்,

இந்தியாவில், ஹாலிவுட் படங்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும் குறிப்பாக, மார்வெல் படங்களுக்கு ரசிகர்கள் அதிகம். அந்த வகையில் மார்வெல் படைப்புகளுள் ஒன்றாக உருவானதுதான், ஸ்பைடர் மேன் படங்கள்.

இதன் முதல் பாகமான ஸ்பைடர் மேன்: ஹோம் கம்மிங்கில் டாம் ஹாலண்ட் கதாநாயகனாக நடித்திருந்தார், அதனைத்தொடர்ந்து, ஸ்பைடர் மேன் பார் பிரம் ஹோம் படமும், கடைசியாக 3-வது பாகமாக ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் படமும் வெளியாகின. இப்படங்களில் கதாநாயகியாக ஜெண்டயா நடித்திருந்தார். இந்த 3 பாகங்களையும் ஜான் வாட்ஸ் இயக்கி இருந்தார்.

இதனையடுத்து 4-வது பாகத்தை ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், நடிகர் டாம் ஹாலண்ட் இந்த படத்தின் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

'இதன் கதையை 3 வாரங்களுக்கு முன்பே நானும் ஜெண்டயாவும் படித்தோம். கதை எனக்கு மிகவும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. இது ரசிகர்களின் எதிர்பார்பை உண்மையில் பூர்த்தி செய்யக்கூடிய படம். கதையில் இன்னும் சில வேலைகள் உள்ளன' என்றார். முன்பு, இப்படத்தில் ஜெண்டயாவுக்கு பதிலாக வேறோரு கதாநாயகியை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article