"ஸ்பைடர் மேனாக சிவகார்த்திகேயன், கேப்டன் அமெரிக்காவாக..": வைரலாகும் நானியின் மார்வெல் லிஸ்ட்

13 hours ago 2

சென்னை,

நானி, ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் கடந்த 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடை போட்டு வரும் படம் ஹிட் 3. இப்படம் முதல் நாளில் மட்டும் ரூ.43 கோடி வசூலித்துள்ளது.

இதற்கிடையில், சமீபத்தில் பாலிவுட்டில் இப்படத்தின் புரமோசனில் நானி மற்றும் ஸ்ரீநிதி கலந்துகொண்டனர். அப்போது அவர்கள் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது. அதன்படி, தென்னிந்திய சினிமாவில் அவெஞ்சர்ஸ்போல ஒரு படம் எடுத்தால் எந்தெந்த கதாபாத்திரங்களுக்கு யாரெல்லாம் சரியாக இருப்பார்கள் என்று கேட்கப்பட்டது.

அப்போது அவெஞ்சர்ஸ் கதாபாத்திரங்களின் பெயர்களை ஸ்ரீநிதி ஷெட்டி ஒவ்வொன்றாக கூற, அதற்கு சரியாக இருக்கும் நடிகர்களின் பெயர்களை நானி கூறினார்.

நானியின் மார்வெல் லிஸ்ட்:-

ஹல்க் - பிரபாஸ்

தோர் - ராம் சரண்

ஸ்பைடர் மேன் - சிவகார்த்திகேயன்

கேப்டன் அமெரிக்கா - சூர்யா

பிளாக் பாந்தர் - அல்லு அர்ஜுன்

ஆன்ட்-மேன் - துல்கர் சல்மான்

அயர்ன் மேன் - நானி

Read Entire Article