ஸ்பேடெக்ஸ் திட்டம்; இஸ்ரோவின் விண்வெளி ஆராய்ச்சி பயணத்தின் மிகப்பெரிய மைல்கல்: செல்வப்பெருந்தகை பாராட்டு

4 hours ago 3

சென்னை: ஸ்பேடெக்ஸ் திட்டம் இஸ்ரோவின் விண்வெளி ஆராய்ச்சி பயணத்தின் மிகப்பெரிய மைல்கல் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, முதல் முறையாக SpaDeX (Space Docking Experiment ) முறையை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது.

இது இஸ்ரோவின் விண்வெளி ஆராய்ச்சி பயணத்தின் மிகப்பெரிய மைல்கல்லாகும்.SpaDex தொழில்நுட்பம் நிலவுக்கு மனிதனை அனுப்பும் இந்தியாவின் எதிர்கால லட்சியதிற்கு மிகவும் முக்கியமானதாகும்.ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து ஒரே ராக்கெட் மூலம் டிசம்பர் 30ம் தேதி விண்ணில் ஏவப்பட்ட, SDX01 மற்றும் SDX02 ஆகிய இரண்டு விண்கலங்களை விண்வெளியில் வெவ்வேறு வேகத்தில் 10 முதல் 20 கிலோமீட்டர் தொலைவில் பயணிக்க வைத்து பின்னர் அவை இரண்டையும் விண்வெளியில் வைத்து ஒன்று சேர்த்து சாதனை புரிந்துள்ளது.

SpaDeX (Space Docking Experiment ) தொடங்கப்பட்டபோது இஸ்ரோ தலைவராக இருந்த எஸ்.சோமநாத், சில நாட்களுக்கு முன்பு ஓய்வு பெறும் வரை அதன் முன்னேற்றத்தைக் கண்காணித்துக் கொண்டிருந்தார். Space Docking Experiment மிகவும் சிக்கலான செயல்முறை என்றும் , அதற்கு தீவிர துல்லியம் மற்றும் ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது எனவும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

1962ம் ஆண்டு அன்றைய பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேரு அவர்கள் ஆட்சி காலத்தில் நிறுவப்பட்ட Indian National Committee for Space Research (INCOSPAR), விக்ரம் சாராபாய் அவர்கள் தலைமையில் செயல்பட்டுவந்தது, பின்னர் 1969ம் ஆண்டு அன்றைய பிரதமர் அன்னை இந்திரா காந்தி அம்மையார் ஆட்சி காலத்தில் ISRO என பெயர் மற்றம் செய்யப்பட்டு விண்வெளி துறையில் பல்வேறு சாதனைகளை புரிந்து தேசத்திற்கு பெருமை சேர்த்து வருகிறது.

இத்தகைய சவாலான சாதனையை நிகழ்த்தியதன் மூலம் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு பிறகு நான்காவதாக இத்தகைய சாதனையை நிகழ்த்தி வரலாறு படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு வாழ்த்து தெரிவித்தார்.

The post ஸ்பேடெக்ஸ் திட்டம்; இஸ்ரோவின் விண்வெளி ஆராய்ச்சி பயணத்தின் மிகப்பெரிய மைல்கல்: செல்வப்பெருந்தகை பாராட்டு appeared first on Dinakaran.

Read Entire Article