ஸ்பெயின் முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து.. 10 பேர் உயிரிழப்பு

6 months ago 22

மாட்ரிட்:

ஸ்பெயின் நாட்டின் ஜராகோசா மாகாணம் வில்லாபிரான்கா டி எப்ரோ நகரில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் இன்று அதிகாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு படையினர், கடுமையாக போராடி ஒரு சில மணி நேரங்களில் தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதியோர் இல்லத்தில் 82 முதியவர்கள் வசித்து வந்த நிலையில், இறந்தவர்கள் அனைவரும் முதியோரோ அல்லது அங்கு பணியாற்றியவர்களா என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை.

Read Entire Article