ஸ்பெயினை புரட்டிப் போட்ட பெருவெள்ளம்: பலி 211 ஆக உயர்வு

2 weeks ago 6

மேட்ரிட்: வரலாறு காணாத வகையில் ஸ்பெயினை புரட்டிப் போட்ட திடீர் பெருவெள்ளம், ஒரு சில நிமிடங்களில் பல நகரங்களின் மக்களை மீள முடியாத வகையில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஸ்பெயினில் கடந்த வாரம் இதுவரை இல்லாத வகையில் புயல் வீசியதை அடுத்து பெருமழை கொட்டித் தீர்த்தது. அதனால் ஏற்பட்ட பெருவெள்ளம் சில நிமிடங்களில் பல நகரங்களை மூழ்கடித்து மக்களை திகைக்க வைத்தது. இந்த சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 211ஆக உயர்ந்து விட்டது. இதில் 205 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இவர்களில் 202 பேர், வலென்சியா நகரை சேர்ந்தவர்கள்.

இருவர், கேஸ்டிலா லா மன்சா நகரை சேர்ந்தோர். காணாமல் போன நுாற்றுக்கணக்கானோரை தேடும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஸ்பெயினை சோகத்தில் ஆழ்த்திய கொடூர புயல் மேக்ரோ, துரியா நதிப் படுகைகளின் மேல் தீவிரமாக நிலைகொண்டு மழையை பொழிந்ததாகவும், அதனால் நதிகளின் இரு கரைகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதாகவும் தகவல்கள் கூறுகின்றன. தற்போது மண் புகுந்த நகர்களை சுத்தம் செய்யும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் 8 ஆயிரம் ராணுவ வீரர்களும், 5 ஆயிரம் போலீசாரும் களம் இறக்கப்பட்டுள்ளனர்.

The post ஸ்பெயினை புரட்டிப் போட்ட பெருவெள்ளம்: பலி 211 ஆக உயர்வு appeared first on Dinakaran.

Read Entire Article