ஸ்பெயினில் நடந்த பந்தயத்தில் பங்கேற்றபோது கார் விபத்தில் சிக்கிய அஜித் உயிர் தப்பினார்

7 hours ago 2

சென்னை: தமிழில் ‘விடாமுயற்சி’ என்ற படத்தை தொடர்ந்து அஜித் குமார் நடித்து வரும் ‘குட் பேட் அக்லி’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அஜித் குமார், தற்போது கார் பந்தயத்தில் தனது அணியினருடன் பங்கேற்று வருகிறார். துபாயில் நடந்த கார் பந்தயத்தில் பங்கேற்றபோது, அஜித் குமார் ஓட்டிய கார் விபத்தில் சிக்கியது.

இந்நிலையில், நேற்று ஸ்பெயின் நாட்டில் வாலென்சியா நகரில் நடந்த கார் பந்தயத்தில் அஜித் குமார் பங்கேற்றார். அப்போது அவரது காரை முந்திச்செல்ல முயன்ற இன்னொரு கார் பலமாக மோதியது. இதில் அஜித் குமாரின் கார் 3 முறை பல்டியடித்தது. இதில் சிக்கிய அஜித் குமார், அதிர்ஷ்டவசமாக காயம் எதுவுமின்றி உயிர் தப்பினார். தற்போது அவர் நலமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post ஸ்பெயினில் நடந்த பந்தயத்தில் பங்கேற்றபோது கார் விபத்தில் சிக்கிய அஜித் உயிர் தப்பினார் appeared first on Dinakaran.

Read Entire Article