ஸ்பெயினில் திடீர் வெள்ளம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக உயர்வு!

3 months ago 13

பார்சிலோனா: ஸ்பெயினில் திடீர் ஏற்பட்ட வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95ஆக உயர்ந்துள்ளது. ஸ்பெயினில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கிய நிலையில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதானல் ஆயிரக்கணக்கான மக்கள் குடியிருப்புக்களில் இருந்து வெளியேற முடியாமல் தவித்துள்ளார். போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் ஹெலிகாப்டர் மூலமாக கார் மற்றும் வீடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.

பாதிக்கப்பட்ட இடங்களில் சுமார் ஆயிரம் வீரர்கள் இடம்பெற்று அவசர மீட்பு குழுவினர் மீட்புபணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பல இடங்களில் கார்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து சுமார் 300 பேருடன் சென்ற அதிவேக ரயில் மலாகா அருகே திடீரென தடம் புரண்டது. எனினும் இதில் யாருக்கும் காயமேற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வலென்சியா நகரம் மற்றும் மாட்ரிக் இடையே ரயில்சேவை தடைபட்டது.

இந்நிலையில், ஸ்பெயினில் திடீர் ஏற்பட்ட வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95ஆக உயர்ந்துள்ளது. ஸ்பெயின் நாட்டில் மழை, வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன் தினம் வெள்ளத்தால் 51 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பலர் மாயமான நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.

The post ஸ்பெயினில் திடீர் வெள்ளம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக உயர்வு! appeared first on Dinakaran.

Read Entire Article