ஸ்டார்க், கம்மின்ஸ் இல்லை.. அவர் பந்துவீச்சின் பிராட்மேன் - ஆஸி.முன்னாள் கேப்டன் பாராட்டு

11 hours ago 4

சிட்னி,

ஐ.பி.எல். தொடரில் நேற்றிரவு நடந்த 50-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில்  மும்பை 100 ரன் வித்தியாசத்தில் மெகா வெற்றியை பெற்றது. 

முன்னதாக பார்டர்- கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின்போது ஏற்பட்ட காயம் காரணமாக நடப்பு ஐ.பி.எல். சீசனின் ஆரம்ப கட்டத்தில் காயம் காரணமாக சில போட்டிகளை மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா தவற விட்டார். அதன் காரணமாக தொடர் தோல்விகளை சந்தித்த மும்பை புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் தடுமாறியது. ஆனால் முக்கியமான தருணத்தில் கம்பேக் கொடுத்த பும்ரா இதுவரை 7 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை கைப்பற்றி மும்பை தொடர்ந்து 6 வெற்றிகளைப் பெற முக்கிய பங்காற்றியுள்ளார்.

இந்நிலையில் ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச்சின் டான் பிராட்மேன் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆடம் கில்கிறிஸ்ட் பாராட்டியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "ஜஸ்பிரித் பும்ரா ஆல் டைம் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக இருக்கலாம். பும்ரா பல்வேறு சூழ்நிலைகளில் செயல்படுவது பற்றி நீங்கள் அலசி ஆராயுங்கள். அதேபோன்ற வகைப்பாட்டில் பேட்டிங்கில் சர் டான் பிராட்மேன் செயல்பாடுகள் மற்றும் புள்ளிவிவரங்களையும் ஆராயுங்கள். பிராட்மேன் பேட்டிங்கில் எப்படியோ பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ராவும் அனைத்து விதமான வேரியசன், சூழ்நிலைகள், பிட்ச்களில் அசத்தக்கூடிய வகைப்பாட்டை சேர்ந்தவர் என்று நினைக்கிறேன்.

சொல்லப்போனால் அவர் தற்சமயத்தில் தன்னைச் சுற்றி இருக்கும் மற்ற வீரர்களை காட்டிலும் முன்னிலையில் இருக்கிறார். அது நாம் ஒரு உண்மையான மகத்துவமான வீரரை பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதைச் சொல்கிறது. இந்தியாவில் இருந்து வந்த ஒரு வேகப்பந்து வீச்சாளர் கடந்த ஆஸ்திரேலிய தொடரில் அசத்தினார். பும்ரா பந்துவீச்சை போல ஆஸ்திரேலியர்கள் ஒருபோதும் இந்திய பந்து வீச்சாளர்களுக்கு எதிராக பயப்பட்டதோ அல்லது மிரண்டதோ இல்லை" என்று கூறினார்.

Read Entire Article