
தெற்கு ஜார்ஜியா,
அண்டார்டிகா கண்டத்திற்கு வடக்கே அமைந்துள்ள ஸ்கோடியா கடல் பகுதியில் இன்று காலையில் திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மதியம் 2.02 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 60.94 டிகிரி தெற்கு அட்சரேகையிலும், 39.02 டிகிரி மேற்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை