சென்னை: மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராக பதவியேற்றார். அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட நிலையில் மனோ தங்கராஜுக்கு பால்வளத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் அமைச்சர் மனோ தங்கராஜூக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்து நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதன்படி, மின்சாரம் மற்றும் மதுவிலக்கு – ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் வனத்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
இவர்களுக்கு பதிலாக போக்குவரத்து துறை அமைச்சராக இருந்து வரும் சிவசங்கருக்கு கூடுதலாக மின்சாரத்துறையும், வீட்டுவசதி துறை அமைச்சராக இருந்து வரும் முத்துசாமிக்கு மதுவிலக்கு – ஆயத்தீர்வுத்துறை பொறுப்பு கூடுதலாகவும் வழங்கப்பட்டுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதேபோல், பொன்முடி வகித்து வந்த வனத்துறை மற்றும் கதர் கிராமங்கள் துறை ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினராக உள்ள மனோ தங்கராஜை அமைச்சரவையில் சேர்க்க பரிந்துரைக்கப்பட்டார். அதன்படி, புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளோருக்கு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது.
இதில் மீண்டும் அமைச்சராக மனோ தங்கராஜ் பதவியேற்றுக்கொண்டார். அமைச்சர் மனோ தங்கராஜுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட நிலையில் மனோ தங்கராஜுக்கு பால்வளத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ராஜகண்ணப்பன் வசம் இருந்த பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்ராஜுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அமைச்சராக பதவியேற்ற மனோ தங்கராஜுக்கு ஆளுநர், முதலமைச்சர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
The post மீண்டும் அமைச்சராக பதவியேற்ற மனோ தங்கராஜுக்கு பால்வளத் துறை ஒதுக்கீடு! appeared first on Dinakaran.