'ஸ்குவிட் கேம் சீசன் 3' தொடரின் டீசர் அப்டேட்

4 hours ago 2

சென்னை,

கடந்த 2021-ம் ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் 'ஸ்குவிட் கேம்'. 9 எபிசோடுகளை கொண்ட இந்தத் தொடரை பிரபல இயக்குனர் ஹ்வாங் டாங் - ஹியூக் இயக்கி இருந்தார். இந்த தொடர் வெளியான முதல் நான்கு வாரங்களில் 1.65 பில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது.

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட தொடராகவும் இந்த தொடர் உள்ளது. அதனை தொடர்ந்து இதன் 2-வது சீசன் கடந்த டிசம்பர் மாதம் வெளியானது. இதனையடுத்து இந்தத் தொடரின் அடுத்த சீசன் எப்போது வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

அதன்படி, இந்த தொடரின் 3-வது சீசன் வரும் ஜூன் மாதம் 27-ம் தேதி வெளியாகும் என நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த தொடரின் டீசர் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, நாளை இதன் டீசர் வெளியாக உள்ளது. 

Smile, we have something special for you. Squid Game Season 3 Teaser tomorrow. pic.twitter.com/V0lGCHaUcq

— Netflix (@netflix) May 4, 2025
Read Entire Article