‘ஷேப்டியான இடம் வேண்டுமாம்…’ போலீஸ் ஸ்டேஷன் முன் போதை நபர் ‘கொர்ர்ர்ர்’சமூக வலைதளங்களில் வைரல்

1 week ago 4

சிவகாசி: சிவகாசி போலீஸ் ஸ்டேஷன் முன்பு போதை ஆசாமி ஒருவர் மணிக்கணக்கில் தூங்கி கொண்டிருந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி நகர் பகுதியில் நேற்று மது அருந்திய வாலிபர் வீட்டுக்கு நடந்து சென்றார். நடக்க, நடக்க போதை ஏறியது. இதனால் தொடர்ந்து நடக்க முடியாமல் தள்ளாடியபடியே சென்றார். ‘இப்படியே நடந்து சென்றால் வீடுபோய் சேர முடியாது. எங்காவது படுத்துவிட்டு, பத்திரமாக வீடுபோய் சேருவோம்’ என முடிவு செய்தார். இதனால் தள்ளாடி நடந்தவாறே, ஷேப்டியான இடத்தை தேடி அலைந்தார். ஆனால் ஒரு இடமும் அமையவில்லை.

இறுதியாக சிவகாசி டவுன் போலீஸ் ஸ்டேஷன் முன்பு வந்தவர் திடீரென நின்றார். ‘அடடா.. இதுதான் பாதுகாப்பான இடம். எவனும் நம்ம செல்போன உருவ முடியாது’ என முடிவு செய்து, ஸ்டேஷன் முன்பு படுத்து உறங்க தொடங்கினார். மணிக்கணக்கில் இவர் தூங்கிக் கொண்டிருந்ததை பார்த்த பொதுமக்கள், ‘ஆசாமிக்கு ரொம்ப தில்லுதான். குடிச்சு முடிச்சு எங்க வந்து மட்டையாகியிருக்கான். அடிவாங்காம போனா அதிர்ஷ்டசாலிதான்’ என்று சிரித்தபடி சென்றனர். இந்த புகைப்படம் தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The post ‘ஷேப்டியான இடம் வேண்டுமாம்…’ போலீஸ் ஸ்டேஷன் முன் போதை நபர் ‘கொர்ர்ர்ர்’சமூக வலைதளங்களில் வைரல் appeared first on Dinakaran.

Read Entire Article