
டாக்கா,
வங்காளதேசத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிராக நடைபெற்ற மாணவர்கள் போராட்டம் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசுக்கு எதிராக திரும்பியது. இதையடுத்து, பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
இதனை தொடர்ந்து வங்காளதேசத்தில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது. பிரதமராக முகமது யூனிஸ் பொறுப்பேற்றுள்ளார்.
இந்நிலையில், ஷேக் ஹசீனா கட்சியான அவாமி கட்சியின் மாணவர் அமைப்புக்கு வங்காளதேச அரசு தடை விதித்துள்ளது. பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக அவாமி கட்சியின் மாணவர் அமைப்பான வங்காளதேச ஷஸ்ரா லீகிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.