ஷாலிமார் - சென்னை ரெயிலில் முன்பதிவில்லா கூடுதல் பெட்டிகள் இணைப்பு

1 month ago 5

சென்னை,

ஷாலிமார் - சென்னை சென்ட்ரல் செல்லும் (வண்டி எண். 22825) எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஒரு ஏசி டூ டயர் மற்றும் ஒரு ஏசி த்ரீ டயர் பெட்டிகளுக்கு பதிலாக இரண்டு முன்பதிவில்லா இரண்டாம் வகுப்பு பெட்டிகள் சேர்க்கப்படும். இந்த மாற்றமானது ஏப்ரல் 15ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

அதேபோல் மறுமார்க்கத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் - ஷாலிமார் செல்லும் (வண்டி எண். 22825) எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் ஒரு ஏசி டூ டயர் மற்றும் ஒரு ஏசி த்ரீ டயர் பெட்டிகளுக்கு பதிலாக இரண்டு முன்பதிவில்லா இரண்டாம் வகுப்பு பெட்டிகள் சேர்க்கப்படும். இந்த மாற்றமானது ஏப்ரல் 16ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இந்த திருத்தத்திற்குப் பிறகு மேற்கண்ட ரெயில்களின் பெட்டி அமைப்பு 2- ஏசி டூ டயர் பெட்டிகள், 6- ஏசி த்ரீ டயர் பெட்டிகள், 5- ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள், 4- பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள், 1- இரண்டாம் வகுப்பு பெட்டி மற்றும் 1- லக்கேஜ் கம் பிரேக் வேன் இருக்கும் என ரெயிவே அறிவித்துள்ளது.

Read Entire Article