சிட்னி: 8 அணிகள் பங்கேற்ற 9வது சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், ஏ பிரிவில் இந்தியா, நியூசிலாந்து அணிகளும், பி பிரிவில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
இந்த நிலையில் துபாயில் நாளை நடைபெற உள்ள இந்தியாவுக்கு எதிரான முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியிலிருந்து துவக்க ஆட்டக்காரர் மேத்யூ ஷார்ட் விலகியிருப்பது அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. காயம் காரணமாக ஷார்ட் விலகியுள்ளதாகவும், அவருக்கு பதிலாக ஆல் ரவுண்டர் கூப்பர் கோனொலி அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
The post ஷார்ட் விலகல் ஆஸ்திரேலியாவுக்கு சிக்கல் appeared first on Dinakaran.