ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: நோவக் ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேற்றம்

1 month ago 15

ஷாங்காய்,

ஷாங்காய் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த காலிறுதி போட்டி ஒன்றில் உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், செக் குடியரசு வீரர் ஜாகப் மென்சிக் உடன் மோதினார். இந்த போட்டியில் ஜோகோவிச் 6-7 (4-7), 6-1, 6-4 என்ற செட் கணக்கில் மென்சிக்கை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு காலிறுதி போட்டியில் அமெரிக்க வீரர் டெய்லர் பிரிட்ஸ், பெல்ஜியாவின் டேவிட் கோபின் உடன் மோதினார். இந்த போட்டியில் டெய்லர் பிரிட்ஸ் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் டேவிட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

Read Entire Article